மதுரையில் செல்லூர் கம்மாய் உபரி நீர் வெளியேற்ற ரூபாய் 11.9 கோடியில் சிமெண்ட் கால்வாய் அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Published Date: October 31, 2024

CATEGORY: CONSTITUENCY

மதுரையில் செல்லூர் கம்மாய் உபரி நீர் வெளியேற்ற ரூபாய் 11.9 கோடியில் சிமென்ட் கால்வாய்.

மதுரையில் செல்லூர் கம்மாய் உபரி நீர் வெளியேற்ற ரூபாய் 11.9 கோடியில் சிமெண்ட் கால்வாய் அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா 62 வது குருபூஜையை ஒட்டி கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு மதுரை வந்தார். பிறகு புதன்கிழமை காலை தேவர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் அவர் மதுரைக்கு வந்தார்.

விமான நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில் மதுரையில் அண்மையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள்          பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதியில் இது போன்று மீண்டும் ஏற்படாமல் இருக்க 290 மீட்டர் நீளத்துக்கு சிமெண்ட் கால்வாய் அமைக்கலாம் என முதல்வரிடம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து செல்லூர் கம்மாயிலிருந்து உபரி நீர் வெளியேற்ற வசதியாக ரூபாய் 11.9 கோடியில் சிமெண்ட் கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பிற்பகல் 1.40 மணிக்கு விமான மூலம் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Media: Dinamani